பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ராம்கோபால் வர்மா என்றாலே சர்ச்சைக்குரிய டிவீட்டுகளைப் போடுபவர் என்பது மட்டுமே பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், சமயங்களில் எதிர்பாராத விதத்தில் மற்றவர்களைப் பாராட்டும்படியான டிவீட்டுகளையும் அவர் பதிவிடுவார். அப்படி ஒரு டிவீட்டைப் பதிவிட்டு ஒரு அதிசயத்தை ஏற்படுத்தியிருக்கிறார் ராம்கோபல் வர்மா. அவர் சொன்னதும் ஒரு அதிசயமான செய்திதான். அதாவது 'ஸ்ரீதேவி உண்மையிலேயே ஒரு அதிசயம்' எனப் பாராட்டி ஸ்ரீதேவியின் சிறு வயது போட்டோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
ராம்கோபால் வர்மா ஸ்ரீதேவியின் தீவிர ரசிகர். பொதுவாகவே வர்மாவின் படங்களில் நாயகிகளுக்கும் நல்ல முக்கியத்துவம் இருக்கும். அவருடைய படங்களில் நாயகிகளின் கதாபாத்திரங்களும் பேசப்படும். வர்மாவின் இயக்கத்தில் 'க்ஷணம் க்ஷணம், கோவிந்தா கோவிந்தா' ஆகிய படங்களில் ஸ்ரீதேவி நடித்திருக்கிறார்.
“இந்தியத் திரையுலகில் இந்தச் சிறுமி மிகப் பெரும் சூப்பர் ஸ்டார் ஆக வருவார் என யாராவது கற்பனை செய்திருப்பார்களா. ஸ்ரீதேவி உண்மையிலேயே ஒரு அதிசயம்” எனப் பாராட்டியுள்ளார். வர்மாவின் டிவீட்டுகளுக்கு எப்போதுமே எதிர்ப்புப் பதிவுகள் அதிகமாக இருக்கும். ஆனால், வித்தியாசமாக இந்தப் பதிவிற்குப் பல லைக்குகளும், நல்ல விதமான கமெண்ட்டுகளும் கிடைத்திருக்கின்றன.