மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
கோடை விடுமுறை வந்துவிட்டாலே ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவும் ரசிகர்களின் பொழுது போக்குகளில் ஒன்றாக அமைந்துவிடும். இரவு நேரங்களில் ஐபிஎல் போட்டியைக் காண டிவி முன் கிரிக்கெட் ரசிகர்கள் திரண்டுவிடுவார்கள். ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமாகும் போது துவக்க விழா ஒன்றை நடத்துவார்கள். அந்த விழாவில் பாலிவுட்டின் பிரபல நடிகர், நடிகைகள் நடனமாடுவது வழக்கம். அந்த விதத்தில் இந்த வருடத் துவக்க விழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.
அந்த விழாவில் நடிகை எமி ஜாக்சனின் நடனமும் இடம் பெற்றது. சில ஹிட்டான ஹிந்தி பாடல்களின் மெட்லியை நடனமாக வழங்கினார் எமி ஜாக்சன். அவர் ஆடி முடித்ததுமே சமூக வலைத்தளங்களில் எமி ஜாக்சனின் நடனத்தைப் பற்றி கடுமையான விமர்சனங்கள் வெளிவர ஆரம்பித்தன.
ரசிகர்கள் ஒவ்வொருவரும் எமியின் நடனத்தை விமர்சித்து பல பதிவுகளை பதிவிட்டனர். ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் துவக்க விழா ஏமாற்றத்தைத் தரும் விழாவாகவே இருக்கிறது. எமியை விட சன்னி தியோல், விராட் கோலி நன்றாக நடனமாடுவார்கள். மேடையில் 30 சிறந்த டான்சர்கள் இருந்தார்கள். ஆனால், அனைவரது பார்வையும் எமியின் மோசமான நடனத்தின் மீதுதான் இருந்தது என கடுமையான பதிவுகளைப் போட்டனர்.
எமி ஜாக்சனுக்கு நடிப்பும் வராது, நடனமும் வராது. அப்படியிருந்தும் அவரை இந்த விழாவில் எதற்காக நடனமாட வைத்தார்கள் என்று தெரியவில்லை.