ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
அமீர்கான் நடித்த சிறந்த படங்களில் முக்கியமானது ‛3 இடியட்ஸ். ராஜ்குமார் ஹிரானி இயக்கிய இப்படத்தில் அமீர்கானுடன் மாதவன், சர்மான் ஜோஷி, கரீனா கபூர், போமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்தனர். பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனையை படைத்த இப்படம், தமிழிலும் ‛நண்பன் என்ற பெயரில் ரீ-மேக்கானது. பிமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்க, விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா ஆகியோர் நடித்திருந்தனர். ஹிந்தி அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும் சுமாரான வெற்றியை தந்தது.
‛3 இடியட்ஸ் படம் மெக்ஸிகன் மொழியில் ரீ-மேக்கானது. முறைப்படி ரீ-மேக் உரிமையை வாங்கி இப்படத்தை ரீ-மேக் செய்து மார்ச் மாதம் 31 ஆம் தேதி வெளியிட்டது படக்குழு. இப்படத்தை அந்நாட்டை சேர்ந்த இயக்குநர் கார்லஸ் பொலாடா ரீ-மேக் செய்துள்ளார் . மெஸிகன் நடிகர்களான அல்போன்ஸா தோசல், கிறிஸ்டியன் வெனீஸ், ஜெர்மன் வல்தேஸ், மார்தா உள்ளிட்டோர் முக்கியமான ரோலில் நடிக்க உள்ளனர்.