'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
மலையாளத்தில் அறிமுகமாகி இங்கே தமிழ்நாட்டில் வந்து ஸ்திரமாக இடத்தை பிடித்துக்கொள்ளும் நடிகைகள் மத்தியில் தமிழ்நாட்டிலிருந்து மலையாளத்திற்கு சென்று கதாநாயகியாக நடித்துவரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நிச்சயமாகவே வித்தியாசமானவர் தான். கடந்த ஜனவரி மாதம் வெளியான துல்கர் சல்மான் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' படத்தில் அவருக்கு நடிக்க நிறைய வாய்ப்பும் கொடுக்கப்பட்டு இருந்தது. அவரது நடிப்பும் நன்றாக பேசப்பட்டது.
அந்தவகையில் மலையாளத்தில் அவரது அடுத்த படமாக 'சகாவு' தயாராகியுள்ளது. சொல்லப்போனால் துல்கர் படத்திற்கு முன்னே இந்தப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார் ஐஸ்வர்யா. விரைவில் ரிலீசாகவுள்ள இந்தப்படத்தில் நிவின்பாலி ஹீரோவாக நடித்துள்ளார். ஆச்சர்யமாக இந்தப்படத்தில் ஜானகி என்கிற கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டுவிதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார்.
அதில் ஒன்று 65 வயது பெண்மணி வேடமாம். இந்த வேடத்திற்கான மேக்கப்புக்கும், அதை பர்பெக்ட்டாக ஸ்கிரீனில் பிரதிபலிக்கும் நடிப்புக்கும் ரொம்பவே மெனக்கெட்டுள்ளாராம் ஐஸ்வர்யா ராஜேஷ். எனக்கே ரெண்டு கெட்டப்புகள் என்றால் நாயகன் நிவின்பாலிக்கு நான்கைந்து கெட்டப்புகளாவது இருக்கும் என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.