'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
பாலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வரும் சோனம் கபூர், இப்போது அக்ஷ்ய் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‛பேடுமேன்' படத்தில் நடிக்கிறார். அக்ஷ்ய்யின் மனைவியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். பேடுமேன் படத்தில் சோனம் கபூரின் ரோல் என்னவென்று இதுவரை தெரியாமல் இருந்த நிலையில், இப்போது அவரது ரோல் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. பேடுமேனில் சோனம் கபூர், தபேலா கலைஞராக நடிக்கிறாராம். இதற்காக அவர் பிரபல தபேலா கலைஞர் முக்தா மதனிடம் உரிய பயிற்சி பெற்று வருகிறார்.
பேடுமேன் படத்தை ஆர்.பால்கி இயக்க, அக்ஷ்ய்யின் மனைவி டிவிங்கிள் கண்ணா தயாரிக்கிறார். இந்தப்படம் பெண்களுக்கான சானிட்டரி நாப்கினை குறைந்த விலையில் தயார் செய்யும் எந்திரத்தை கண்டுபிடித்த தமிழகத்தை சேர்ந்த அருணாசலம் முருகானந்தத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வருகிறது.