வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பிரபல நடிகர் சரண்ராஜின் மகன் தேஜ். மகனை சினிமாவில் நடிக்க வைக்க விரும்பினார் சரண்ராஜ். இதற்கு முன்பு இரண்டு படங்கள் தேஜை வைத்து தொடங்கப்பட்டு டிராப் ஆகிவிட்டது. மூன்றாவதாக ஆரம்பித்த லாலி லாலி ஆராரோ படம் நிறைவு பகுதிக்கு வந்திருக்கிறது. இதில் தேஜ் ஜோடியாக ஷிவானி என்ற புதுமுகம் நடிக்கிறார். இவர்களுடன் மனோபாலா, லட்சுமிப்ரியா உள்பட பலர் நடிக்கிறார்கள். நாகபூஷன் ஒளிப்பதிவு செய்கிறார், ராமகோபாலகிருஷ்ணன் இசை அமைக்கிறார். லிங்கன்ராஜாளி என்ற புதுமுகம் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: ஒவ்வொரு தாய் பாடும் தாலாட்டு பாடலின் ஹம்மிங்தான் லாலி லாலி ஆராரோ. அதையே தலைப்பாக வைத்திருக்கிறோம். இது தாய் மீது பாசம் கொண்ட ஹீரோவுக்கும். தகப்பன் மீது பாசம் கொண்ட ஹீரோயினுக்கும் இடையிலான கதை. அம்மாதான் உலகம் என்று வாழும் நாயகன் லாலி, அதேப்போல் தன் மகனை விட உலகத்தில் சிறந்தது எதுவும் இல்லை என்ற நினைப்பில் உள்ள அம்மா. இவர்களுக்கு இடையில் காதலியாக, உள்ளே வர அதை அந்த குடும்பம் எப்படி எதிர் கொள்கிறது என்பது கதையின் ஒரு பகுதி.
தன் மகள் தான் தனது ஆதாரம் என்று வாழும் ஒரு தகப்பன். தகப்பனை தவிர உலகத்தில் உயர்ந்தது இல்லை என்று வாழும் மகள். இவர்களுக்கு இடையே காதலனாக லாலி உள்ளே வர அதை எப்படி அந்த குடும்பம் எதிர் கொள்கிறது என்பதும் தான் இந்த படத்தின் இன்னொரு பகுதி. இதை செண்டிமெண்ட் கலந்து குடும்பத்துடன் பார்க்கும் படமாக உருவாக்கி உள்ளோம் என்றார் இயக்குனர் லிங்கன்ராஜாளி.