'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விதார்த் நடித்த காட்டுமல்லி படத்திற்காக தமிழுக்கு அழைத்து வரப்பட்டவர்தான் தெலுங்கு நடிகை ஸ்ரீதிவ்யா. ஆனால் அந்த படம் இப்போதுவரை கிடப்பில் கிடக்கிறது. அதையடுத்து சிவகார்த்திகேயனுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யாவுக்கு அந்த படம் மெகா ஹிட்டாக அமைந்ததால் பேசப்படும் நடிகையானார். அதைத்தொடர்ந்து ஜீவா, வெள்ளக்கார துரை, காக்கி சட்டை, ஈட்டி, காஷ்மோரா என பல படங்களில் நடித்த ஸ்ரீதிவ்யாவின் மார்க்கெட் தற்போது மந்தநிலையில் உள்ளது.
இந்நிலையில், ஜீவாவுடன் சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தில் நடித்து வந்த ஸ்ரீதிவ்யாவுக்கு தற்போது மீண்டும் அதர்வாவுடன் ஒத்தைக்கு ஒத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. ஏற்கனவே அவருடன் நடித்த ஈட்டி படம் ஸ்ரீதிவ்யாவுக்கு நல்ல பெயரை வாங்கித்தந்ததால் அந்த செண்டிமென்ட் இந்த படத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கிறார்