‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மோகன்லால் நடிக்க இருக்கும் வரலாற்று படம் ரந்தமூழம். எம்.டி.வாசுதேவ நாயர் எழுதி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ரந்தமூழம் என்கிற வரலாற்று நாவலை பழசிராஜா புகழ் ஹரிஹரன் இயக்கப்போவதாகவும் அதில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கப்போவதாகவும் ஏற்கனவே செய்திகள் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டன.
இந்தக்கதையில் உள்ள பிரதான கதாபாத்திரங்களில் தென்னிந்தியா மட்டுமல்லாது பாலிவுட்டில் இருந்து நடிகர்களை அழைத்து வந்து நடிக்க வைக்கும் முயற்சிகள் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.. அந்தவகையில் பாலிவுட் பிக் பி அமிதாப்பச்சன் இந்தப்படத்தில் பீஷ்மர் கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகின. ஆனால் இதை அமிதாப் பச்சன் தரப்பு மறுத்துள்ளது.
இதுதொடர்பாக அமிதாப்பின் செய்திதொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது... ‛‛மலையாளத்தில் உருவாக இருக்கும் ரந்தமூழம் படத்தில் பீஷ்மர் ரோலில் அமிதாப் நடிப்பதாக வெளியான செய்தி உண்மை இல்லை, அது தவறான செய்தி'' என்று கூறியுள்ளார்.