சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
ராஜ்குமார் ராவ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பேகன் ஹோகி தெரி'. ரொமான்ட்டிக் காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்தை அஜய் கே பன்லால் இயக்குகிறார். அமுல் விகாஸ் மோகன், நிதின் உபத்தயா மற்றும் டோனி டிசோசா ஆகியோர் தயாரிக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் ராஜ்குமார் ராவ், சிவன் வேடம் அணிந்து பைக்கில் சோகமுடன் அமர்ந்திருக்கிறார். அவருக்கு பின்னால் கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டுள்ளது. இந்தப்போஸ்டர் ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளது. அதேசமயம், இந்த போஸ்டருக்கு எதுவும் சிக்கல் எழுமோ என்ற அச்சமும் இருக்கிறது. 'பேகன் ஹோகி தெரி' படம் மே மாதம் 26ஆம் தேதி வெளியாக இருக்கிறது.