தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அஜித்துடன் இணைந்து 'என்னை அறிந்தால்' படத்தில் த்ரிஷாவின் மகளாக நடித்து கவனம் ஈர்த்தவர் பேபி அனிகா. அடுத்தடுத்து தமிழில் மிருதன், நானும் ரவுடி தான் படங்களில் நடித்த அனிகா மலையாளத்தில் மம்முட்டி-நயன்தாரா நடித்த அனிகா, இரண்டு வருடங்களுக்கு முன் 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தில் நயன்தாராவின் மகளாக துறுதுறு பெண்ணாக நடித்திருந்தார். இப்போது மீண்டும் மம்முட்டியுடன் இணைந்து 'தி கிரேட் பாதர்' படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் பேபி அனிகா. இந்தப்படத்தில் மம்முட்டி-சினேகா தம்பதியின் மகளாக சாரா டேவிட் என்கிற கேரக்டரில் நடித்திருக்கிறார் பேபி அனிகா.
இந்த இரண்டு படங்களிலும் மம்முட்டி-அனிகா காம்பினேஷனில் ஒரு சுவாரஸ்யம் ஒளிந்திருக்கிறது.. அதாவது பாஸ்கர் தி ராஸ்கல் படத்தில் அடிதடி பார்ட்டியான மம்முட்டிக்கு சாதுவான மகனாக சனூப் சந்தோஷ் நடித்திருந்தார். சனூப்பின் பள்ளித்தோழியான அனிகாவுக்கோ சண்டை என்றால் உயிர்.. அதனால் மம்முட்டியின் சண்டைக்காட்சிகளில் சனூப் கண்களை மூட்டி பயந்து ஒதுங்கிக்கொள்ள அனிகாவோ அதை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு கைதட்டி ரசிப்பார்.. அவரைப்பொறுத்தவரை சனூப்பின் தந்தையான மம்முட்டி ஒரு சூப்பர் ஹீரோவாகவே தெரிவார்.