பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், பிஸியான நடிகராகவும் வலம் வருபவர் விஜய் சேதுபதி. தனது வித்தியாசமான, யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர், இப்போது பாலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். பாலிவுட்டில் பிரபல நடிகையாக திகழ்ந்த பாக்யஸ்ரீ, தனது மகன் அபிமன்யு தாஸானியை களம் இறக்க உள்ளார். அபிமன்யு நடிக்கும் படத்திற்கு ‛மார்டு கோ டார்டு நகின் ஹோட்டா' என்று பெயரிடப்பட்டுள்ளது. அபிமன்யு ஜோடியாக பிரபல டிவி நடிகை ராதிகா மாதன் நடிக்கிறார். வாசன் பாலா இயக்குகிறார். இப்படத்தை பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யாப் தயாரிக்கிறார். இந்தப்படத்தில் தான் நடிகர் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான ரோலில் நடிக்க உள்ளார். ஆக்ஷ்ன், காமெடி படமாக உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது. தமிழில் அசத்திய விஜய் சேதுபதி, பாலிவுட்டிலும் அசத்துவாரா...? பொறுத்திருந்து பார்ப்போம்.