ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் சங்கத் தேர்தல் போல தமிழக மக்களிடம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் தமிழ்த் திரையுலகத்தில் ஒரு பரபரப்பை நடத்தி முடித்திருக்கிறது தயாரிப்பாளர் சங்கத் தேர்தல். நடிகர் சங்கத் தேர்தல் போலவே புதிய இளம் அணி வெற்றி பெறுமா அல்லது அனுபவம் வாய்ந்த மூத்த தயாரிப்பாளர்களின் அணி வெற்றி பெறுமா என திரையுலகத்தில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
தேர்தலில் போட்டியிட்ட ராதாகிருஷ்ணன் அணியினரும், கேயார் அணியினரும் தங்களது எதிரியாக விஷால் அணியை மட்டுமே நினைத்தார்கள். ஒவ்வொரு பத்திரிகையாளர் சந்திப்பிலும் விஷாலைப் பற்றியும், அவரது அணியைப் பற்றியும் மட்டுமே கடுமையாக விமர்சித்தார்கள். ஆனால், பதிலுக்கு விஷால் தரப்பிலிருந்து அதற்கு எந்த விதமான பதிலடியும் கொடுக்கப்படவில்லை. இந்த ஒரு முடிவுதான் விஷால் அணிக்கு பெரும் சாதகமாக அமைந்தது என்கிறார்கள்.
அதோடு, கடைசி சந்தர்ப்பத்தில் நடிகர் சங்கக் கட்டிட அடிக்கல் நாட்டு விழாவை பலத்த எதிர்ப்புக்கிடையிலும் விஷால் நடத்தி முடித்தது அவருடைய அணிக்கு ஆதரவை அதிகரித்துள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் அந்த விழாவில் வந்து கலந்து கொண்டதும், நேற்று அவர்கள் இருவரும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க வந்ததும், விஷால் அணிக்கு பக்கபலமாக அமைந்துவிட்டது.
இன்றைய திரையுலகம் டெக்னாலஜி சார்ந்த பல புதிய விஷயங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சமூக வலைத்தளங்கள், பைரசி இணையதளங்கள் உள்ளிட்ட புதிய வடிவிலான பிரச்சனைகள் அதிகம் வந்து கொண்டிருக்கின்றன. அது பற்றிய விவரங்கள் தெரிந்த இன்றைய இளம் தலைமுறையினர்தான் அதற்கு ஈடு கொடுத்து பணியாற்ற முடியும். இன்னும் கூட இணையதளங்கள் பற்றிய புரிதல் இல்லாமல், இன்றைய தலைமுறை எதை அதிகம் நேசிக்கிறார்கள் என்ற விவரம் இல்லாமல் சில சீனியர் தயாரிப்பாளர்கள் பதவிக்கு வந்தால் செயல்படுவார்களோ என்ற சந்தேகமும் விஷால் அணிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறது.
இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப புதியவர்கள் செயல்படுவார்கள் என்ற நோக்கத்தில்தான் விஷால் அணி இந்த அளவிற்கு வெற்றியைப் பெற்றுள்ளது என்று மூத்த தயாரிப்பாளர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.