ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சுதா கோங்கரா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங் மற்றும் பலர் நடிக்க கடந்த ஆண்டு துவக்கத்தில் வெளிவந்த படம் 'இறுதிச் சுற்று'. ஒரு இடைவெளிக்குப் பிறகு மாதவன் நடித்த படம், நிஜ குத்துச் சண்டை வீரரான ரித்திகா சிங் நடித்த படம் என்ற சிறப்புகளுடன் வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று, வசூலிலும் வெற்றிப் படமாக அமைந்தது. மாதவனுக்கு தமிழில் மீண்டும் ஒரு மார்க்கெட்டை இப்படம் ஏற்படுத்திக் கொடுத்தது. ரித்திகா சிங் சிறந்த நடிகைகக்கான தேசிய விருதையும் பெற்று நிரந்தர நடிகையாகவும் மாறும் அளவிற்கு இப்படம் அமைந்தது.
இப்படத்தை தமிழில் இயக்கிய சுதா கோங்கராவே தெலுங்கிலும் ரீமேக் செய்து இயக்கினார். தமிழில் மாதவன் நடித்த கதாபாத்திரத்தை தெலுங்கில் வெங்கடேஷ் ஏற்று நடித்தார். ரித்திகா சிங் தெலுங்கிலும் நாயகியாக நடித்தார். இப்படம் கடந்த வாரம் மார்ச் 31ம் தேதி வெளியானது.
தமிழைப் போலவே தெலுங்கிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் முதல் நாளில் மட்டும் சுமார் 7 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகச் சொல்கிறார்கள். நேற்று இரண்டு நாளிலும் இப்படத்தின் வசூல் அதிகமாகவே இருந்துள்ளதாம்.
பத்து நாட்களுக்கு முன்பு வெளியான பவன் கல்யாணின் 'கட்டமராயுடு' படத்தின் இரண்டாவது வசூல் நிலவரம் குறைந்த நிலையில் 'குரு' படம் பற்றிய விமர்சனம் அப்படத்திற்கு ரசிகர்களை வரவழைத்துள்ளது. தமிழைப் போலவே தெலுங்கிலும் 'இறுதிச் சுற்று' லாபகரமான படமாக அமையும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.