தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த மார்ச்-30ஆம் தேதி மம்முட்டி நடித்த 'தி கிரேட் பாதர்' படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தப்படத்திற்கு கிடைத்துள்ள ஒப்பனிங் வரவேற்பை பார்த்தால் இன்னும் இரண்டு வாரங்களுக்கு குறையாமல் கூட்டம் இருக்கும் என்றே சொல்கிறது விநியோகஸ்தர் தரப்பு. ஆனால் இந்தநிலையில் திடீரென மம்முட்டியின் இன்னொரு படமான 'புத்தன் பணம்' படத்தை வரும் ஏப்-13லேயே ரிலீஸ் செய்யவும் ஒருபக்கம் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இது 'தி கிரேட் பாதர்' படத்தின் வசூலை பாதிக்கும் என்றாலும் கூட மம்முட்டியும் இதற்கு ஒப்புக்கொண்டபின் தான் ரிலீஸ் வேலைகள் துரிதமாக நடைபெறுகின்றன.
மே மதம் ரிலீஸ் பண்ண திட்டமிட்டிருந்த படத்தை முன்கூட்டியே ரிலீஸ் செய்ய மம்முட்டி ஒப்புக்கொண்டதன் பின்னணியில் இன்னொரு காரணமும் உண்டு. அவர் மகன் துல்கர் சல்மான் நடித்துள்ள 'காம்ரேட் இன் அமெரிக்கா (சி.ஐ.ஏ) படம் வரும் மே-5 ஆம் தேதி ரிலிசாக இருக்கிறது.. கடந்த சில வாருடங்களாக தந்தை - மகன் இருவர் படங்களும் ஒரே சமயத்தில் மோதுவது போல சில சந்தர்ப்பங்கள் அமைந்தாலும் மம்முட்டியின் சாமர்த்தியத்தால் அந்த மோதல் தவிர்க்கப்பட்டே வந்திருகிறது. இப்போது மகன் படத்துடன் மோதி வசூல் சண்டை போட வேண்டாமே என்றுதான் தனது படத்தை முன்கூட்டியே ரிலிஸ் செய்ய ஒப்புக்கொண்டாராம் மம்முட்டி..