மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
இரண்டு தினங்களுக்கு முன் வெளியான மம்முட்டியின் 'தி கிரேட் பாதர்' படம் முதல் நாள் வசூலாக 4 கோடியே 31 லட்சம் வசூலித்து இதுநாள் வரை சாதனை பட்டியல்களில் முதல் இரு இடங்களில் இருந்த கபாலி (4.20), புலி முருகன் (4.05) படங்களின் சாதனையை இந்தப்படம் முறியடித்துள்ளது.. கிட்டத்தட்ட 202 தியேட்டர்களில் வெளியான 'தி கிரேட் பாதர்' படம் சிறப்பு காட்சி, முன்னிரவு காட்சி எல்லாமாக சேர்ந்து 958 காட்சிகள் திரையிடப்பட்டு இந்த சாதனையை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
வழக்கமாக மோகன்லால் படம் மட்டுமே (ரஜினி தவிர்த்து) முதல்நாள் வசூலில் முன்னணியில் இருப்பதும் அடுத்து வெளியாகும் அவரது படமே முந்தைய சாதனையை முறியடிப்பதும் தான் நிகழ்ந்து வருகிறது. இந்தமுறை மம்முட்டியின் கைகளுக்கு அந்த சாதனை சென்றுவிட்டதால் வரும் வாரம் (ஏப்-7) வெளியாக இருக்கும் மோகன்லால் நடித்துள்ள '1971;பியாண்ட் பார்டர்ஸ்' படத்திற்கு இந்த சாதனையை முறியடிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதை உணர்ந்து தானோ என்னவோ இந்தப்படத்தை இயக்கியுள்ள இயக்குனர் மேஜர் ரவி மோகன்லால் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். அதாவது '1971;பியாண்ட் பார்டர்ஸ்' பட ரிலீஸ் தினத்தன்று தியேட்டர் நிர்வாகத்திடம் அதிக அளவில் சிறப்பு காட்சிகள் திரையிட வேண்டும் என முன்கூட்டியே வற்புறுத்துங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார். மம்முட்டியின் படம் மோகன்லால், ரஜினி படங்களின் சாதனையை முறியடித்ததற்கு சுமார் 80 தியேட்டர்களில் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது தான் முக்கிய காரணம் என விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுவது இங்கே குறிப்பிடத்தக்கது.