தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒரு கனவு போல என்ற படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தை பத்திரிகையாளர்கள் பார்த்து விட்டார்கள். நல்ல கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நடித்திருக்கும் அமலா ரோஸ்குரியன் நடிப்பு அனைவராலும் பாராட்டப்படுகிறது. தனது அறிமுகம் குறித்து அமலா ரோஸ்குரியன் கூறியதாவது:
கேரளாவில் உள்ள கோட்டையம் எனது சொந்த ஊர். குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்துள்ளேன். பின்னர் விளம்பரப் படத்தில் நடித்தேன். துல்கர் சல்மான நடித்த தீவிரம் படத்தில் வில்லன் அனுமோகன் மனைவியாக நடித்தேன். அதன் மூலம் தமிழ் சினிமா வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தபோது என்னை வைத்து விளம்பர படம் எடுத்த ஒளிப்பதிவாளர் அழகப்பன் மூலமாக ஒரு கனவு போல படத்தின் வாய்ப்பு கிடைத்தது. இதில் ராமகிருஷ்ணன் மனனவியாக நடித்திருக்கிறேன். ஒரு விநாடி சபலத்துக்கு ஆளான ஒரு குடும்ப பெண்ணின் கேரக்டர்.
படம் பார்த்த எல்லோரும் மனதார பாராட்டினார்கள், பூர்ணிமா மேடம், பிரியாமணி மேடம், சித்தாரா மேடம் மாதிரி இருப்பதாக சொன்னார்கள். சந்தோஷமாக இருந்தது. படம் விரைவில் வெளிவந்து மக்களும் பாராட்டுவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன். என்கிறார் அமலா ரோஸ்குரியன்.