தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டில் வெளியான சாக் அண்ட் டஸ்டர் படம் பெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தை தயாரித்த அம்னி சுரானி தற்போது மலையாளத்தில் திகில் நிறைந்த த்ரில்லர் படத்தை எடுக்க உள்ளார். இப்படத்திற்கு ஈ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிப்பதற்காக நடிகை கவுதமி டடிமல்லாவிடம் கேட்டுள்ளார். அவரும் உடனடியாக இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். ஈ படம் முழுக்க முழுக்க திகில் படமாம். இப்படத்தில் செக்ஸ் மற்றும் வன்முறை காட்சிகள் கிடையாதாம். இப்படத்தை குக்கூ சுரேந்திரன் இயக்க உள்ளாராம். குக்கூ சுரேந்திரன் இதற்கு முன் ஓரல், ரேஸ் அண்ட் வீரலிப்பட்டு ஆகிய படங்களை இயக்கி உள்ளார். ஈ படத்தை சங்கீத் சிவன், அமின் சுரானி ஆகியோர் தயாரிக்க உள்ளனர். சங்கீத் சிவன் புரோடெக்ஷன்ஸ் மற்றும் சுரானி பிக்சர்ஸ் பேனரில் இப்படம் தயாரிக்கப்பட உள்ளது.