Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காளி படத்தை வெளியிடும் உதயநிதி

02 ஏப், 2017 - 13:58 IST
எழுத்தின் அளவு:
udhayanidhi-stalin--to-announce-the-tittle-of

'எமன்' படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிக்க ஒப்புக்கொண்ட படம் 'அண்ணாதுரை'. புதுமுக இயக்குனர் சீனுவாசன் இயக்கத்தில், ராதிகா சரத்குமாரின் 'ராடான் மீடியா' நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதாக அறிவிப்பு வெளியானது. அண்ணாதுரை படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே, விஜய் ஆண்டனி தரப்புக்கும், ராதிகா சரத்குமாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படம் ட்ராப்பானது.


அண்ணாதுரை படம் ட்ராப்பானதால் கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய் ஆண்டனி . இந்தப் படத்திற்கு ரஜினி பட டைட்டிலான 'காளி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1980 - ல் ஐ.வி.சசி இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான படம் 'காளி'.


பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த படத்துக்கு முதலில் பரிசீலிக்கப்பட்டது காளி என்ற தலைப்புதான். அப்போது காளி தலைப்பு கிடைக்காமல்போனதால் வேறு வழியில்லாமல் மெட்ராஸ் என்று பெயர் வைத்தனர். இந்நிலையில், இப்போது காளி என்ற தலைப்பை விஜய் ஆண்டனி சொந்தமாக்கியிருக்கிறார். 'வணக்கம் சென்னை' படத்தை தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கும் இந்த படத்தை முதலில் உதயநிதியின் ரெட்ஜெயன்ட் பட நிறுவனம்தான் தயாரிப்பதாக இருந்தது.


விஜய் ஆண்டனி சம்பளம் தொடர்பாக உடன்பாடு ஏற்படவில்லை. எனவே 'விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன்' நிறுவனமே காளி படத்தை தயாரிக்கிறது. 'காளி' படம் ரெடியான பிறகு அந்தப் படத்தை வாங்கி உலகம் முழுக்க வெளியிட இருக்கிறார் உதயநிதி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in