ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் சொந்த அண்ணன் மகன் நரசிம்மன்(49). சிறு வயதிலேயே தந்தையை இழந்த நரசிம்மனை, விஜயகாந்த் தான் வளர்த்து வந்தார்.
இவர் ஜீன்ஸ், படையப்பா ஆகிய படங்களில் விசுவல் எஃபெக்ட் மேற்பார்வையாளராகப் பணியாற்றியுள்ளார். மேலும், விஜயகாந்தின் பல படங்களில் சி.ஜி பணிகளையும் இவர் செய்துள்ளார். இவருக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் பார்க்க, நரசிம்மன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது நரசிம்மனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதில் பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.