ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரஜினி நடித்த பில்லா, கழுகு, தீ, மனிதன், பாயும்புலி என பல டைட்டீல்களில் இளவட்ட நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இந்நிலையில், தற்போது அண்ணாதுரை படத்தில் நடித்து வரும் விஜய் ஆண்டனி, அதையடுத்து கிருத்திகா உதய நிதி இயக்கத்தில காளி என்ற படத்தில் நடிக்கிறார். அவரைத் தொடர்ந்து தற் போது அடங்காதே, செம, ஐங்கரன், 4 ஜி, நாச்சியார் என பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஜி.வி.பிரகாசும் ரஜினி நடித்த குப்பத்து ராஜா டைட்டீலில் நடிக்கிறார்.
இந்த படத்தை நடன மாஸ்டர் பாபா பாஸ்கர் இயக்குகிறார். இப்படத்தில் பார்த்திபனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க, கதாநாயகியாக பூனம் பாஜ்வா ஒப்பந்தமாகியிருக்கிறார். சேவல், கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை உள்பட சில படங்களில் நாயகியாக நடித்துள்ள பூனம்பாஜ்வா, ரோமியோ ஜூலியட், முத்தின கத்தரிக்காய் படங்களில் கவர்ச்சிகரமான வேடத்தில் நடித்தார். அதையடுத்து படம் இல்லாமல் இருந்தவர் இப்போது குப்பத்து ராஜா படத்தில் ஜி.வி.பிரகாசுக்கு ஜோடியாக மீண்டும் ரொமான்ஸ் கலந்த காதல் கதாபாத்திரத்தில் கலக்கப் போகிறாராம்