அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
மலையாள சினிமாவில் மம்முட்டி-இயக்குனர் ரஞ்சித் கூட்டணி ரொம்பவே பிரசித்தம்.. அந்தவகையில் தற்போது மம்முட்டியை வைத்து 'புத்தன் பணம்' என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார் ரஞ்சித்.. இந்தபடத்தில் கதாநாயகிகளாக இனியா, ஷீலு ஆப்ரஹாம் என இரண்டாம் நிலை ஹீரோயின்கள் தான் நடித்துள்ளனர்.. மம்முட்டி நடித்துள்ள 'தி கிரேட் பாதர்' படம் மார்ச்-30 ரிலீஸ் என்பதால் இந்தப்படத்தை மேமாதம் இரண்டாவது வாரத்தில் ரிலீஸ் செய்வதாகத்தான் முதலில் அறிவித்திருந்தனர்..
ஆனால் இப்போது அந்த திட்டத்தில் அதிரடி மாற்றமாக வரும் ஏப்-13ஆம் தேதியே இந்தப்படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் முடிவெடுத்துள்ளார்.. இதை சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார்.. மம்முட்டியின் 'தி கிரேட் பாதர்' படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து சூட்டோடு சூடாக தனது படத்தையும் ரிலீஸ் பண்ணினால் வசூலை அள்ளலாம் என நினைத்ததே இவரது இந்த முடிவுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் அதேசமயம் 'தி கிரேட் பாதர்' பட ஓட்டத்தை 'புத்தன் பணம்' படம் தடுத்து நிறுத்தும் அபாயமும் உண்டு என்பதை மறுப்பதற்கும் இல்லை.. இன்று (ஏப்-1) திலீப் நடித்த 'ஜார்ஜேட்டன்ஸ் பூரம், வரும் ஏப்-7ஆம் தேதி மோகன்லாலின் '1971 ; பியாண்ட் பார்டர்ஸ்' ஆகிய படங்கள் ரிலீஸாக இருக்கும் இந்த நேரத்தில் 'புத்தன் பணம்' தயாரிப்பாளர் எடுத்த முடிவு அவருக்கு சாதகமாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்..