ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள சினிமாவின் மனோரமா என்று வர்ணிக்கப்படுகிறவர் கே.பி.ஏ.சி லலிதா. அறிமுகமான காலத்திலிருந்தே குணசித்திரம் மற்றும் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். 300 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் லலிதா மலையாள சினிமாவின் முக்கிய ஆளுமைகளில் ஒருவர். காதலுக்கு மரியாதை உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மணிரத்னம் இயக்கும் காற்று வெளியிடை படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார். மனோரமா போன்று காமெடியும், குணசித்திரமும் கலந்த கலவையான நடிகையின் இடம் காலியாகத்தான் இருக்கிறது. அதை லலிதா நிறைவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவை சரளா காமெடி நடிகையாகத்தான் இருக்கிறார். ஊர்வசியும் அப்படி ஆகிவிட்டார். சரண்யாவுக்கு செண்டிமென்ட்தான் காமெடி சரிவராது இந்த நிலையில் லலிதாவின் ரீ-என்ட்ரி, அது மணிரத்தினம் படத்தின் மூலமாக என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது.