ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பில்லா-2, உன்னைப்போல் ஒருவன் படங்களை இயக்கியவர் சக்ரி டோல்டி. இவர் தற்போது நயன்தாரா நடிப்பில் கொலையுதிர்காலம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் இந்தி பதிப்பில் தமன்னா நாயகியாக நடிக்கிறார். இப்படம் மூலம் தென்னிந்தியாவில் காலடி எடுத்து வைக்கிறது பூஜா என்டர்டைன்மென்ட் அண்ட் பிலிம் லிமிடெட் நிறுவனம். திரைப்பட தயாரிப்புத்துறையில் 23 ஆண்டுகளாக படங்கள் தயாரித்துள்ள இந்நிறுவனம் இந்தி, மராத்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளில் இதுவரை 31 படங்கள் தயாரித் துள்ளது.
அந்தவகையில், அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான் உள்பட பாலிவுட்டின் முன்னணி நடிகர்களை வைத்து படங்கள் தயாரித்துள்ள இந்நிறுவனம், முதன்முறையாக நயன்தாரா நடிக்கும் கொலையுதிர்காலம் படம் மூலம் தென்னிந்திய சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளது. அந்த வகையில், தமிழில் கொலையுதிர்காலம் படத்தை தயாரிக்கும் இந்நிறுவனம், இதையடுத்து தமிழ், மலை யாளத்திலும் தொடர்ந்து படங்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.