சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் முன்னணியில் இருப்பவர் வருண் தவான். தற்போது வருண், தனது தந்தை டேவிட் தவான் இயக்கத்தில் ‛ஜூட்வா-2' வில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். வருணுக்கு ஜோடியாக நடிகைகள் டாப்சியும், ஜாக்குலினும் நடிக்கிறார்கள். சாஜித் தயாரிக்கிறார். சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்ற வருண், இப்படத்தில் தான் எப்படி நடிக்க கமிட்டானேனன் என்பது பற்றி விவரித்தார்.
அப்போது வருண் பேசுகையில், "ஜூட்வா-2 படத்தை என் தந்தை இயக்குவார் என்று நினைக்கவில்லை. நான் அவரது மகன் என்பதால் என்னை இப்படத்தில் நடிக்க வைக்க மாட்டார் என்று எண்ணினேன். ஆனால் நான் நடித்த படங்கள் வெற்றி பெற்றதால் தான் என்னை இப்படத்தில் நடிக்க வைத்துள்ளார் என்று நினைக்கிறேன் என்றார்.
ஜூட்வா-2 படம் செப்டம்பர் மாதம் 29-ம் தேதி வெளியாக இருக்கிறது.