Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பீமன் மோகன்லால்.. பீஷ்மன் அமிதாப்..!

31 மார், 2017 - 14:02 IST
எழுத்தின் அளவு:
amithab-meet-mohanlal-in-a-event

மோகன்லால் நடிக்க இருக்கும் வரலாற்றுப்படமான ரந்தமூழம் படம் பற்றி நாளுக்கு நாள் புதுப்புது அப்டேட்கள் ஏறிக்கொண்டே இருக்கின்றன.. இவையெல்ளாம் அதிகாரப்பூர்வமற்றவைதான் என்றாலும் அந்தப்படத்தில் பணியாற்ற இருக்கும் சில ஆர்வக்கோளாறு நபர்களால் இவை வெளியாகி வருகிறது என்பதால் கிட்டத்தட்ட உண்மைக்கு பக்கத்தில் தான் இருக்கின்றன என்றே எடுத்துக்கொள்ளலாம்.. அந்தவகையில் எம்.டி.வாசுதேவ நாயர் 1984ல் எழுதி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ரந்தமூழம் என்கிற வரலாற்று நாவலை பழசிராஜா புகழ் ஹரிஹரன் இயக்கப்போவதாகவும் அதில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கப்போவதாகவும் ஏற்கனவே செய்திகள் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டன.


மகாபாரதத்தை தழுவி எழுதப்பட்டுள்ள இந்தக்கதையில் உள்ள பிரதான கதாபாத்திரங்களில் தென்னிந்தியா மட்டுமல்லாது பாலிவுட்டில் இருந்து நடிகர்களை அழைத்துவந்து நடிக்கவைக்கும் முயற்சிகள் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.. அந்தவகையில் பாலிவுட் பிக் பி அமிதாப்பச்சன் இந்தப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்பதுதான் லேட்டஸ் நியூசாக பேசப்படுகிறது.. இந்தப்படத்தின் நாயகன் மோகன்லாலுக்கு பீமன் கேரக்டர் என்பது முதலிலேயே சொல்லப்பட்ட விஷயம் தான். அந்தவகையில் அமிதாப் பீஷ்மர் கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்றே சொல்லப்படுகிறது. ஏற்கனவே மலையாளத்தில் மேஜர் ரவி இயக்கிய காந்தகார் படத்தில் மோகன்லாலும் அமிதாப்பும் இணைந்து நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in