சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னை, ஹபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் சிறப்பாக நடந்தது. இதில் நடிகர்கள் ரஜினி, கமல் இருவரும் பங்கேற்றனர். இருவருக்கும் நடிகர் சங்கம் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் இணைந்து சங்க கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ‛‛நடிகர் சங்க கட்டடத்துக்கு நல்லபடியாக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இனி எல்லாமே வெற்றி தான். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்'' என்றார்.