பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சரைய்னோடு படத்தின் வெற்றிக்கு பின்னர் அல்லு அர்ஜூன் நடித்து வரும் திரைப்படம் டீஜே. இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் இரட்டை வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படும் இப்படத்தில் நாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கின்றார். அண்மையில் வெளிவந்த இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மே மாதத்தில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட இப்படத்தின் வெளியீடு ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாம். திரைக்கதையில் சில மாற்றங்களை செய்யும் படி அல்லு அர்ஜூன் இயக்குனரிடம் கூறியிருப்பதே இந்த காலதாமதத்திற்கு காரணம் என கூறப்படுகின்றது. பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். அபுதாபிக்கு பாடல் படப்பிடிப்பிற்காக சென்ற படக்குழு சில தினங்களுக்கு முன்னர் ஐதராபாத் திரும்பியது. தற்போது ஐதராபாத்தில் டீஜே பட படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது.