வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பவன் கல்யாண் ஷ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்து நடித்த கட்டமராய்டு திரைப்படம் கடந்த மார்ச் 24 ஆம் தேதி திரைக்கு வந்தது. தமிழில் அஜித் நடிப்பில் சூப்பர் ஹிட்டான வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான கட்டமராய்டு படத்தை இயக்குனர் டோலி இயக்கியிருந்தார். தெலுங்கு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த கட்டமராய்டு ரூ 50 கோடி வசூல் செய்துள்ளது. ஆந்திரா,தெலுங்கானா, தமிழ்நாடு என உலகம் முழுவதும் திரைக்குவந்த கட்டமராய்டு திரைப்படம் உலகம் முழுவதும் ஒரு வாரத்தில் ரூ 50 கோடி வசூல் செய்துள்ளது. பவர் ஸ்டார் பவன் கல்யாணின் ரூ 50 கோடி வசூல் படங்களான கபார் சிங், அந்திரென்டிகி தரெடி, சர்தார் போன்ற படங்களின் வரிசையில் கட்டமராய்டுவும் இணைந்துள்ளது. இதற்கான கொண்டாட்டங்களில் கட்டமராய்டு படக்குழு தற்போது ஈடுபட்டுள்ளது. கட்டமராய்டு படத்தின் சக்ஸஸ் மீட் நடத்த இயக்குனர் டோலி, தயாரிப்பாளர் சரத் மாரர் உள்ளிட்ட படக்குழுவினர் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.