இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தேனிசைத் தென்றல் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த்தேவா. தந்தை பாணியில் சூப்பர் ஹிட் குத்துப் பாடல்களை கொடுத்து வந்தபோதும், பல படங்களில் மெலோடியிலும் ஹிட் கொடுத்துள்ளார். குறிப்பாக, ஜெயம் ரவி நடிப்பில் இவர் இசையமைத்த எம்.குமரன் சன்ஆப் மகாலட்சுமி படத்தின் மெலோடி பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டானது. அதன்பிறகு ஜித்தன் படப்பாடலும் வெற்றி பெற்றது. இப்படி பல படங்களில் ஹிட் கொடுத்த ஸ்ரீகாந்த்தேவாவிடமிருந்து சமீபகாலமாக ஹிட் பாடல்களை கேட்க முடிவதில்லை.
இந்நிலையில், அவர் இசையமைத்துள்ள 100வது படமாக பிரியமுடன் பிரியா என்ற படம் தற்போது ரிலீசுக்கு தயாராகிக்கொண்டி ருக்கிறது. கோழிக்கூவுது அசோக் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தை ஏ.கே.சுஜீத் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இயக்கியிருக்கிறார். சைக்கோ திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கான பிரமோஷன் பாடலுக்கு தற்போது இசையமைத்து வரும் ஸ்ரீகாந்த்தேவா, இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மொத்த பாடல்களையும் ஹிட் பண்ணி விட வேண்டும் என்பதற்காக கூடுதலாக மெனக்கெட்டு வருகிறாராம்.