Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரம்ஜானில் ரிலீஸாகும் எனை நோக்கி பாயும் தோட்டா

30 மார், 2017 - 17:33 IST
எழுத்தின் அளவு:
Enai-noki-paayum-thota-to-be-release-on-Ramzan-festival

கெளதம் மேனனுக்கு தற்போது சிரம திசை போல. அவர் எடுக்கும் படங்கள் எல்லாம் பாதியில் நிற்கிறது. தனுஷ் ஹீரோவாக நடிக்க எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை ஆரம்பித்தார் கௌதம் மேனன். சில பிரச்னைகளால் அப்படம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் முடங்கிப்போயின. அதன் பிறகு பஞ்சாயத்து நடைபெற்று பின்னர் படப்பிடிப்பு நடைபெற்றது.


எனை நோக்கி பாயும் தோட்டா தற்போது ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில் படத்தை ஜூன் மாத இறுதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் இசை அமைப்பாளர் யார் என்பதை மிகவும் ரகசியமாக வைத்துள்ளார் கௌதம் மேனன்.


ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதாக சொல்லப்பட்டது. கடைசியில் தர்புகா சிவாதான் இசையமைத்துள்ளார். ஆனால் அதை அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் உள்ளார். தனுஷுக்கு ஜோடியாக புதுமுகம் மேகா ஆகாஷ் நடித்துள்ளளார். எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை தெலுங்கிலும் வெளியிடும் திட்டத்தில் பாகுபலி ராணாவை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்திருக்கிறார் கௌதம் மேனன். ரம்ஜான் விருந்தாக இப்படம் திரைக்கு வருகிறது.


Advertisement
இரண்டாவது படத்திலும் தொடரும் மாயா சென்ட்டிமெண்ட்இரண்டாவது படத்திலும் தொடரும் மாயா ... பாகுபலி- 2 வழியில் எந்திரன்-2 பாகுபலி- 2 வழியில் எந்திரன்-2


வாசகர் கருத்து (1)

s.sheikkader.துவரங்குறிச்சி கண்டிப்பாக ரமலானில் வராது இந்த படம்........ அச்சம் என்பது மடமையடா இதே போல் தான் ஆனது..... கௌதம் படங்கள் எடுப்பார்..... ஆனால் வராது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Chekka Chivantha Vaanam
    Tamil New Film 96
    • 96
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : த்ரிஷா
    • இயக்குனர் :பிரேம்குமார்
    Tamil New Film MGR
    Tamil New Film Kalavani Mappillai
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in