வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
வாரம் வாரம் ஏகப்பட்ட படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பல படங்களுக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்காமல் ரிலீஸ் ஆகாமல் பின் வாங்குவதும் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சூழலில், முன்னணி ஹீரோக்கள் நடித்த பழைய படங்களை நவீன தொழில் நுட்ப உதவியுடன் டிஜிட்டலில் வெளியிட்டு வருகின்றனர்.
கடந்த வருடம் சிவாஜி நடித்த கர்ணன் படத்தை டிஜிட்டல் வடிவில் வெளியிட்டனர். புதிய படங்களுக்கு இணையாக திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி மிகப்பெரிய வசூலை அள்ளியது. பின்னர் எம்.ஜி.ஆர். நடித்த உலகம் சுற்றும் வாலிபன் போனன்ற படங்களை டிஜிட்டலில் வெளியிட்டனர். அண்மையில், ரஜினி நடித்த பாட்ஷாபடத்தையும் வெளியிட்டனர்.
பாட்ஷா படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த பெரும் வெற்றிபெற்ற வெற்றி விழா திரைப்படம் தற்போது டிஜிட்டல் வடிவில் உருவா வருகிறது. கடந்த 1989 -ஆம் ஆண்டு சிவாஜி புரொடக்சன் தயாரிப்பில் பிரதாப் போத்தன் இயக்கியிருந்த அப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்.
ஆக்க்ஷன் திரில்லர் கதையமைப்பில் உருவான இப்படம் அந்த காலத்தில் பெரும் வரவேற்பு பெற்றது. டிஜிட்டல் வடிவில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் மீண்டும் வெற்றி பெரும் என்று நம்பிக்கையோடு டிஜிட்டலில் உருவாக்கப்பட்டு வருகிறது.