தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'ஹவ் ஓல்டு ஆர் யூ' மற்றும் அதன் ரீமேக்காக தமிழில் '36 வயதினிலே' ஆகிய படங்களை இயக்கியவர் ரோஷன் ஆண்ட்ரூஸ், கடந்த வருடம் தான் இயக்கிய ஸ்கூல் பஸ் படத்தை தொடர்ந்து அடுத்த படத்தில் நிவின்பாலியை ஹீரோவாக வைத்து இயக்கவுள்ளார் என சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் அடிபட்டன. எண்பதுகளில் நிஜமாகவே வாழ்ந்த மிக பயங்கரமான கொள்ளையனான 'காயம்குளம் கொச்சுன்னி' என்பவனின் வாழ்க்கை வரலாற்றைத்தான் இந்தப்படத்தில் படமாக்கவுள்ளார் என்றும் சொல்லப்பட்டது.
காயம்குளம் கொச்சுன்னி என்பவன் கேரளா பார்டரை விட்டு தாண்டிவந்து தமிழக எல்லைப்பகுதியில் திருடுவதில் பெயர்போனவன். அதிலும் களரி சண்டையில் அவனை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்பார்கள். அதனால் இந்த கேரக்டரில் நடிக்கும் நிவின்பாலியும் இந்தப்படத்திற்காக களரி சண்டை பயிற்சி பெற்றுவந்தார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்தப்படம் பற்றிய பேச்சையே காணவில்லை.
நிவின்பாலிக்கு இந்த வருடம் வரிசையாக படங்கள் இருக்கின்றன என்பதால் இந்தவருடம் இந்தப்படத்திற்கு தேதிகள் ஒதுக்கக்கூடிய சாத்தியகூறுகள் இல்லை என்கிறார்கள். அதேசமயம் ரோஷன் ஆண்ட்ரூசும் வேறு எந்த கதையையும் கமிட் பண்ணவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்தப்படம் கரன்ட்டில் இருக்கிறதா அல்லது ட்ராப் ஆகிவிட்டதா என எந்த தகவலையும் சொல்லாமல் மௌனம் காக்கிறார்கள் இயக்குனரும் கதாநாயகனும்.