தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ்கான். நடிகராக மட்டுமல்லாது, இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் உள்ளார். இவர் நடிகை மலைக்கா அரோரா கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 16 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்கள், இப்போது பிரிந்துள்ளனர். இவர்களை இணைத்து வைக்க குடும்பத்தார், நண்பர்கள் உள்ளிட்ட அனைவரும் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இருவரும் மீண்டும் இணைந்து வாழ இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதை அர்பாஸ் கான் மறுத்துள்ளார்.
இதுப்பற்றி அர்பாஸ் கூறுகையில், ‛‛ஒருவேளை நாங்கள் இணைந்து வாழ முடிவெடுத்திருந்தால் அந்த நிகழ்வு நாங்கள் பிரிந்த ஆறு மாதத்திற்குள் நிகழ்ந்திருக்க வேண்டும். இனி அது நடப்பதற்கான வாய்ப்பே இல்லை. நாங்கள் பிரிந்தது பிரிந்தது தான். இனி சேர்ந்து வாழவே முடியாது என்று கூறியுள்ளார்.