மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் சோனாக்ஷி சின்ஹா. தற்போது இவர் ‛நூர்' என்ற படத்தில் நடித்துள்ளார். படம் ரிலீஸ்க்கு தயாராகிவிட்டதால் புரொமோஷன் பணிகளில் பிஸியாகியுள்ளார். நூர் படம், பெண்களை மையமாக கொண்ட படமாக உருவாகி உள்ளது. ஆனால் இப்படி அழைப்பதை சோனாக்ஷி விரும்பவில்லை. மாறாக கோபப்படுகிறார்.
இதுப்பற்றி சோனாக்ஷி கூறியிருப்பதாவது... ‛‛நூர், பெண் சம்பந்தப்பட்ட படம் என்றோ அல்லது பெண்களை மையமாக கொண்ட படம் என்று கூறுவதை நான் விரும்பவில்லை. இதேயே ஒரு ஆண் நடிகர் நடித்தால், அவரது படத்தை ஆண்களை மையமாக கொண்ட கதை என்று சொல்வீர்களா...? எதற்கு இந்த பாகுபாடு. ஆண், பெண் பாகுபாடு பார்த்து தான் படம் பார்க்க செல்கிறீர்களா...?, நான் ஒரு நடிகை, படங்களில் நடிக்கிறேன், இங்கு ஆண்-பெண் பாகுபாடு தேவையில்லை'' என்கிறார்.