சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
யுகாதி திருநாளான நேற்று(மார்ச் 29) கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வந்த நானி மேலும் ஒரு சந்தோஷமான நிகழ்வு நடந்துள்ளது. நானிக்கும் அவரது காதல் மனைவி அஞ்சனாவிற்கும் நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. யுகாதியுடன் சேர்த்து தனது மகன் பிறந்ததையும் நானி கொண்டாடியுள்ளார்.
நானி 2012 அக்டோபர் 27ல் அஞ்சனாவை காதல் திருமணம் செய்து கொண்டார். அஞ்சனாவிற்கு நேற்று ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும் நானி அறிவித்துள்ளார். இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகும் நின்னு கோரி எனும் படத்தில் நானி நடித்து வருகின்றார். நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவாகும் நின்னு கோரி ஜூலையில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலற்று படத்திலும் நானி நடிப்பதாகக் கூறப்பட்டது இதனை அவர் மறுத்துள்ளார்.