Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எல்லா துறைகளிலும் ஆண் ஆதிக்கம் உள்ளது: டாப்சி

30 மார், 2017 - 00:12 IST
எழுத்தின் அளவு:
male-dominated-in-all-sectors

தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானார், இந்த வெள்ளாவி தேவதை. பேபி மற்றும் பிங்க் படங்கள் மூலம், பாலிவுட்டிலும் கால் பதித்தார். நல்ல படங்களில் நான் இருப்பேன் என, சொல்லும், டாப்சி, தன் நடிப்பில், தமிழ் மற்றும் ஹிந்தியில் விரைவில் வெளிவர உள்ள, நான் தான் ஷபானா படம் பற்றியும், தன்னை பற்றியும் பேசுகிறார்.


நான் தான் ஷபானா படம் பற்றி...


தோனி பட இயக்குனர், நீரஜ் பாண்டே எழுதி, ஷிவம் நாயர் இயக்கத்தில் உருவான படம், நான் தான் ஷபானா. படத்தில், நான் தான் ஹீரோ என்று சொல்லலாம்; பிருத்விராஜ் வில்லன். அக் ஷய் குமார் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். ஒரு பணக்கார பெண், எப்படி உளவாளியாக மாறுகிறார் என்பதே கதை. ஜேம்ஸ் பாண்ட் பாணியில் படத்தில் நடித்திருக்கேன். ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில், சண்டை காட்சிகளிலும் நடித்திருக்கிறேன்.


உங்களுக்கு பிருத்விராஜ் வில்லனா?


ஆமாம்; படப்பிடிப்பின் போது, இந்த படத்தை பார்த்து விட்டு, உங்கள் ரசிகர்கள் என் மீது கோபமாகி விடுவாங்க என, அவரிடம் கூறினேன். அந்தளவுக்கு இந்த படத்தில் எனக்கு காட்சி அமைந்துள்ளன. பெரிய நடிகர்கள் கூட நடிக்கும் போது, நிறைய கற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. பாதுகாப்பாக இருப்பதை போன்றும் உணர்கிறேன். பெரும்பாலான நடிகையருக்கு, இந்த மாதிரி டைட்டில் ரோலில் வாய்ப்பு கிடைப்பது அபூர்வம்.


தமிழில் அதிகமாக நடிப்பது இல்லையே; ஏன்?


வாய்ப்பு வந்தால் தானே நடிப்பதற்கு; அப்படி சில படங்கள் வந்தாலும், என்னால் உடனடியாக, கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. அதே தேதியில் வேறு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருப்பேன். படத்தில் நடிக்க அழைப்பவர்கள், முன்கூட்டியே தேதி கேட்டால், கண்டிப்பாக நடிப்பேன்.


இப்போதெல்லாம், ஹீரோயின்கள், கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கின்றனரே?


இந்தியில், ஹீரோயின் சப்ஜெக்ட் படங்கள் நிறைய வருகின்றன; அவை, வெற்றியும் பெறுகின்றன; பிரியங்கா, தீபிகா, அனுஷ்கா, அலியா பட், ஷ்ரத்தா கபூர், கங்கனா போன்ற பெரிய நடிகையர், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் தான் நடிக்கின்றனர். இதுபோன்ற வாய்ப்பு, ஷபானா படம் மூலம் எனக்கு கிடைத்துள்ளது.


தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் மீண்டும் உங்களை எதிர்பார்க்கலாமா?


ஆடுகளம் படத்தில், எனக்கு மட்டும் விருது கிடைக்காதது வருத்தம் தான். வெற்றியிடம் சொல்லியிருக்கேன்; நல்ல கதை அமைந்தால், கண்டிப்பாக, இந்த கூட்டணியில் மீண்டும் நடித்து, விருது வாங்குவேன்.


சினிமாவில் ஆண் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறதா?


எல்லா இடங்களிலும், ஆண் ஆதிக்கம் இருக்கிறது. ஆனால், சினிமாவில் இருக்கும் ஆதிக்கம் தான், வெளியில் தெரிகிறது. பாலிவுட்டில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. விரைவில், எல்லா மொழிகளிலும் இந்த மாற்றங்கள் நிகழும் என, எதிர்பார்க்கிறேன்.


அமிதாப்பை பார்த்து, வியந்த விஷயம்?


அவருக்கு, 75 வயதாகிறது; இப்போதும் கூட, முழுமையான பயிற்சி எடுத்துவிட்டுத் தான், கேமரா முன் நிற்கிறார். எந்த ஒரு காட்சியையும், எளிதாக எடுத்துக்கமாட்டார்; நிறைய முறை, ஒத்திகை பார்த்த பின் தான், கேமரா முன் வருவார். பல விஷயங்களில், அவரை பார்த்து அதிசயித்து போயிருக்கிறேன். முடிந்தவரை, அவரை பின்தொடர விரும்புகிறேன்.


எந்த மொழி படங்களில் நடிப்பது எளிதாக உள்ளது?


ஹிந்தி, என் தாய்மொழி; அதனால், அந்த மொழியில் நடிப்பது எளிதாக இருக்கிறது. தெலுங்கில், இப்போது ஓரளவு பேசக் கற்றுக் கொண்டேன். தமிழில் பேசினால் புரியும். மற்றபடி, எனக்கு நடிப்பு ரொம்ப பிடிக்கும். எந்த மொழியாக இருந்தாலும், என் கேரக்டரை சொல்லி விட்டால் போதும், அந்த ரோலில், நான் வந்து நிற்பேன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in