டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் ஹீரோக்களில் ஹிருத்திக் ரோஷனும் ஒருவர். இயக்குநர் சஞ்சய் குப்தா இயக்கத்தில் ‛காபில்' படத்தில் நடித்தார். இப்படம் ஹிருத்திக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹிருத்திக், என் தந்தை போல் படம் இயக்கும் திறமை என்னிடம் இல்லை என்று கூறினார்
இதைப்பற்றி ஹிருத்திக் மேலும் கூறியதாவது....."என் தந்தை ராகேஷ் ரோஷன் நிறைய படங்கள் இயக்கி ஹிட் கொடுத்து இருக்கிறார். இயக்குநராக நிறைய திறமைகள் வேண்டும், அது எதுவும் என்னிடம் இல்லை. சினிமா இயக்க ஆசை, அதுபற்றிய கற்பனை எனக்குள் இருந்தாலும், அதை திரையில் கொண்டு வர எனக்கு தெரியாது, நான் இந்த விஷயத்திற்கு பொருத்தமாக இருக்க மாட்டேன்" என்று கூறினார்.