ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபத்தில் அனுஷ்கா சர்மா நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் ‛பில்வுரி'. இப்படத்திற்கு மாறுப்பட்ட விமர்சனம் எழுந்தபோதும் வசூல் ஓரளவுக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு உள்ளது. சமீபத்தில் இப்படம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுஷ்காவிடம், இந்திய கிரிக்கெட் அணியில் மிகவும் ஸ்டைலிஷான கிரிக்கெட் வீரர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அனுஷ்கா எந்த பதிலும் அளிக்காமல் மீடியாக்களை பார்த்து நன்றி என்று மட்டும் கூறிவிட்டு சென்றார்.
எதற்காக அனுஷ்கா இந்த கேள்வியை தவிர்த்தார். ஒருவேளை விராட் கோலி என்று சொல்லியிருந்தால் அடுத்தடுத்து கேள்வி வரும் என்பதலா, இல்லை வேறு எந்த வீரரையாவது சொல்லப்போக, அது அனுஷ்கா-கோலி இடையேயான உறவில் பாதிப்பு ஏதும் ஏற்படுத்தும் என்ற அச்சத்தினால் மறுத்துவிட்டாரா...? என்பது அனுஷ்காவிற்கே வெளிச்சம்.