Advertisement

சிறப்புச்செய்திகள்

‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இசை ஆல்பம் சினிமாவாகிறது

29 மார், 2017 - 12:11 IST
எழுத்தின் அளவு:
Music-Album-becomes-Cinema

குறும்பட இயக்குனர் குமரன் ஒரு காதலின் புதுப்பயணம் என்ற இசை ஆல்பத்தை இயக்கி உள்ளார். இதற்கு ஜூபின் இசை அமைத்துள்ளார். ரெக்ஸ், பார்வதி என்ற புதுமுகங்கள் இந்த இசை ஆல்பத்தில் நடித்துள்ளனர். தீவிரமாக காதலிக்கும் இருவர் ஒருவர் விபத்தில் சிக்கி தங்கள் நினைவை இழக்கிறார்கள். அதன் பிறகு அந்த காதலர்கள் தங்கள் காதலை எப்படி மீட்டெடுக்கிறார்கள் என்பதுதான் இசை ஆல்பத்தின் மைய கரு.


தற்போது இந்த ஆல்பத்தை திரைப்படமாக தயாரிக்கிறார்கள். ஆல்பம் வெளியீட்டு விழாவில் இது அறிவிக்கப்பட்டது. இதனை ஹன்சிகா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் சார்பில் இளைய அரசன் தயாரிக்கிறார். பிரஜின், நிஷாந்த் நடிக்கிறார்கள். ஹீரோயின் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். ஆல்பத்துக்கு இசை அமைத்த ஜூபின் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்குகிறது. குறும்படங்கள் திரைப்படங்களாகியிருக்கிறது. ஒரு இசை ஆல்பம் திரைப்படமாவது இதுவே முதல் முறை என்கிறார்கள்.


"நான் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டது இந்த ஒரு நாளுக்காகத்தான். கல்லூரிப் படிப்பு முடிந்து உதவி இயக்குநராகவும் முடியாமல் இருந்த போது என் அம்மா, அப்பா இருவருமே பிடிச்சதை நீ பண்ணுடா நாங்க உனக்கு உதவி செய்கிறோம் என்றார்கள். அதை என்னால் மறக்க முடியாது. வயோல் குறும்படம் நிறைய விருதுகள் பெற்றது . இந்த ஆல்பத்தைத் தயாரிக்க முன் வந்த ரெஜினா பிக்சர்ஸ் ரெக்ஸை மறக்க முடியாது . பூஜையே போடாமல் என் அடுத்த படம் இந்த ஆல்ப அறிவிப்புடன் தொடங்கி விட்டது. அதற்கு உழைக்க இந்த நிமிடத்திலிருந்தே தொடங்கி விட்டேன்.என்றார் இயக்குனர் குமரன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in