தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் கபாலி. இந்த படம் திரைக்கு வரயிருந்த நேரத்தில், கபாலியில் ரஜினியின் கெட்டப்பை போலவே ஒரு பொம்மை செய்து அதை விற்பனைக்கு கொண்டு வந்தனர் ரஜினி ரசிகர்கள். அது கபாலி படத்தின் பிரமோஷனுக்கும் பயன்பட்டது. அதேபோல் இப்போது அஜித்தின் ரசிகர்களும் ஒரு பொம்மை தயார் செய்துள்ளனர்.
தற்போது சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விவேகம். இந்த படத்தில் சிக்ஸ்பேக் கெட்டப்பில் அஜித் போஸ் கொடுக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது மதுரையைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் விவேகம் பொம்மை என்ற பெயரில் விவேகம் அஜித்தின் சிக்ஸ்பேக் பொம்மைகளை செய்துள்ளனர். அந்த பொம்மைகளையும் கபாலி பொம்மைகளைப் போலவே விற்பனைக்கு விட தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்