இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சின்னத்திரை வாயிலாக வெள்ளித்திரைக்கு நுழைந்த ரோபோ சங்கர் நகைச்சுவை நடிகராக ஜொலித்து வருகின்றார். மாரி, வேலையின்னு வந்துட்டா வெள்ளக்காரன், சிங்கம்-3 போன்ற படங்களில் ரோபோ சங்கரின் நகைச்சுவைக்காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. தமிழைத் தொடர்ந்து தெலுங்கு திரை உலகிலும் நகைச்சுவை நடிகராக ரோபோ சங்கர் என்ட்ரி கொடுக்கவுள்ளார். அதுவும் டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் படத்தில் ரோபோ சங்கர் நடிப்பது கூடுதல் சிறப்பு. கட்டமராய்டு படத்தின் வெற்றிக்கு பின்னர் பவன் கல்யாண் நடிக்கவிருக்கும் படத்தை இயக்குனர் திரிவிக்ரம் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. நாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் அனு இமானுவேல் நடிக்கவிருக்கும் இப்படத்தில் ரோபோ சங்கர் நகைச்சுவை வேடத்தில் நடிக்கவுள்ளாராம். விரைவில் இப்படத்தின் பூஜை குறித்த தகவலுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகின்றது.