ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கர்நாடக இசை பாடகி, டி.கே.பட்டம்மாள், காஞ்சிபுரம் அருகே, தாமல் என்ற ஊரில், கிருஷ்ண சுவாமி தீட்சிதர் - காந்திமதி தம்பதிக்கு மகளாக, 1919, மார்ச், 28ல், பிறந்தார். பட்டம்மாள், முறையாக கர்நாடக இசை கற்கவில்லை. கச்சேரிகளில் பாடல்களை கேட்டே, தன் திறமையை வளர்த்து கொண்டார். சிறு வயதில், தன் தந்தை கற்றுக் கொடுத்த பக்தி பாடல்களை பாடுவார். தெலுங்கு ஆசிரியர் ஒருவரிடம், சிறிது காலம் பயிற்சி எடுத்துக் கொண்டார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பாடல்களை, மேடை கச்சேரிகளிலும், திரைப்படங்களிலும் பாடினார். பாபநாசம் சிவன், கோபாலகிருஷ்ண பாரதி மற்றும் முத்துத் தாண்டவர் பாடல்கள், பதங்களை பாடி, தமிழ் பாடல்களின் சிறப்பை பறைசாற்றினார். சங்கீத நாடக அகாடமி விருது, பத்மபூஷண், இசைப்பேரறிஞர் விருது உள்ளிட்ட, பல்வேறு விருதுகளை பெற்றவர். இவர், 2009 ஜூலை, 16ல், காலமானார்; அவர் பிறந்த தினம், இன்று.