ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தை அடுத்து தனுஷ் நடிப்பில் என்னை நோக்கி பாயும் தோட்டா, விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் ஆகிய படங்களை இயக்கி வருகிறார் கெளதம்மேனன்.
இதில் தனுஷ் நடிக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டாதான் அவரது அடுத்த வெளியீடு. இந்த படத்தின் அனைத்து டெக்னீசியன்கள், நடிகர்-நடிகைகளைப் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ள கெளதம்மேனன், படத்தின் இசையமைப்பாளரை மட்டும் இப்போதுவரை சஸ்பென்சாக வைத்து வருகிறார்.
இதற்கிடையே இசையமைப்பாளர் யார் என்பதை சொல்லாமலேயே இரண்டு சிங்கிள் ட்ராக் வெளியிட்டு விட்டார். இப்போதுவரை இசையமைப்பாளரின் பெயரை மட்டும் சொல்லாமல், மிஸ்டர் எக்ஸ் என்று சஸ்பென்ஸ் வைத்து வருகிறார் கெளதம்மேனன். இந்நிலையில், என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு
ஏ.ஆர்.ரகுமான், அனிருத், சிம்பு இவர்களில் யாராவது இசையமைத்திருக்கலாம் என பலரது பெயர்கள் அடிபட்டு வந்த நேரத்தில் இப்போது, கெளதம்மேனனே அந்த படத்திற்கு இசைய மைத்திருக்கலாம் என்றொரு செய்தி கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், இதை யடுத்து, அந்த மிஸ்டர் எக்ஸ் நானில்லை என்று டுவிட் செய்திருக்கிறார் கெளதம்மேனன்.
இப்படி யூகங்கள் வெளியான பிறகும் அந்த இசைய மைப்பாளர் யார் என்பதை சொல்லாமல் அவர் சஸ்பென்சை நீட்டிப்பதற்கு காரணம், இந்த மியூசிக் டைரக்டர் சஸ்பென்சை வைத்தே படத் திற்கு பெரிய அளவில் பிரமோஷன் செய்ய கெளதம்மேனன் திட்டமிட்டிருப்பதுதான் என்றும் சிலர் சொல்கிறார்கள்.