ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் ஹீரோயின்களில் அம்ரிதா சிங்கும் ஒருவர். தற்போது, இவர் ‛ஹிந்தி மீடியம்' என்ற படத்தில் நடிக்கிறார். இதில் இவருடன் இர்பான் கான், பாகிஸ்தான் நடிகை சபா ஓமர், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சாகேத் சவுத்ரி இயக்க, தினேஷ் விஜயன் மற்றும் பூஷண் குமார் தயாரிக்கிறார்கள். இப்படத்தில் அம்ரிதா சிங் பள்ளி முதல்வராக நடிக்கிறார்.
இதைப்பற்றி இயக்குநர் கூறியதாவது... "படத்தில் அம்ரிதா சிங் பள்ளி முதல்வராக நடிக்க உள்ளார். இந்த ரோலில் நடிக்க இவர் தான் சரியான ஆள். ஒரு பள்ளியில் பிரின்சிபல் என்பவர் முக்கியமானவர். இப்படத்திற்காக தனது நடை, உடை பாவனைகள், காஷ்ட்டியூம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் மாற்றி இருக்கிறார் அம்ரிதா'' என்று கூறியுள்ளார்.
‛ஹிந்தி மீடியம் படம் வருகிற மே 12-ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்து இருக்கிறது.