ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நிதானம் காட்டவேண்டியதுதான்.. அதற்காக இவ்வளவு நிதானமா காட்டுவார் என கடந்த ஒரு வருடமாக படம் எதுவும் வெளியிடாமல் ஜெயராமை அவரது ரசிகர்களே கிண்டலடிக்கும் வகையில் வெகு நிதானமாக தனது அடுத்த படமான 'சத்யா'வில் நடித்துவருகிறார் ஜெயராம்.. அதுசரி.. அவர் பயம் அவருக்குத்தானே தெரியும்.. கடந்த மூன்று வருடங்களில் தொடர்ச்சியாக பத்துக்கும் மேற்பட்ட தோல்விப்படங்களை கொடுத்தவருக்கு கடந்த வருடம் ஆரம்பத்தில் வெளியான 'ஆடுபுலியாட்டம்' படம் தான், நூறு நாள் ஓடி வெறியை கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்தியது..
அந்த வெற்றியை தக்கவைத்துக்கொள்ளாவிட்டால், தன்னை மறந்துவிடுவார்களே.. அதுதான் அடுத்தபடம் தாமதமாவதற்கு இவ்வளவு காரணம்.. அந்தவகையில் ஜெயராம் தற்போது நடித்துள்ள 'சத்யா' பக்கா ஆக்சன் பேக்கேஜாக உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இதன் ட்ரெய்லரை பார்க்கும்போது ஜெயராம் முற்றிலும் வேறு ஆளாக மாறி இருப்பது நன்றாகவே தெரிகிறது. இந்தப்படத்தை இயக்கிய இயக்குனர் தீபன் சமீபத்தில் தான் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.