அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
17வது நியூயார்க் இந்திய திரைப்பட விழா வருகிற ஏப்ரல் 30ம் தேதியில் இருந்து மே 7ம் தேதி வரை நடக்கிறது. இதில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட இந்திய மொழிகளில் தயாரான சுமார் 60 படங்கள் வரை திரையிடப்பட இருக்கிறது. இதில் மேற்கு தொடர்ச்சி மலை, ஒரு கிடாயின் கருணை மனு, சிகை ஆகிய தமிழ் படங்கள் திரையிடவும், போட்டி பிரிவில் பங்கேற்கவும் தேர்வாகி உள்ளது.
ஒரு கிடாயின் கருணை மனு படத்தை சுரேஷ் சங்கையா இயக்கி உள்ளார். விதார்த், ரவீணா நடித்துள்ளனர். ஈராஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. காணாமல் போன தனது ஆட்டுகிடாயை தேடி அலையும் ஒரு இளைஞனின் கதை.
மேற்கு தொடர்ச்சி மலை படத்தை விஜய் சேதுபதி தயாரித்துள்ளார், லெனின் பாரதி என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். ஆன்டனி, காயத்ரி கிருஷ்ணா என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். இது மேற்கு தொடர்ச்சி மலையில் வசிக்கும் மலைவாழ் மக்களின் கதை.
சிகை படத்தை காக்கா முட்டை மணிகண்டன் உதவியாளர் ஜெகதீசன் சிபு இயக்கி உள்ளார். டிவைன் ஸ்டூடியோ சார்பில் லோகு தயாரித்துள்ளார். கதிர், ரித்விகா நடித்துள்ளனர். இதில் கதிர் பெண் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த 3 படங்களுமே இன்னும் தியேட்டர்களில் திரையிடப்படவில்லை என்பதும் இதற்கு முன் சில விருதுகளை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.