'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
2012-ம் ஆண்டு வித்யாபாலன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‛கஹானி'. லண்டனிலிருந்து கோல்கட்டா வரும் கர்ப்பினியான வித்யாபாலன், தொலைந்து போன தனது கணவரை தேடி அலையும் ஒரு யதார்த்தமான படம். சுஜாய் கோஷ் இயக்கி இருந்தார். இப்படம் தெலுங்கு, தமிழில் கூட ரீ-மேக்கானது. ஆனால் ஹிந்தியில் வெற்றி பெற்ற அளவுக்கு தெலுங்கு, தமிழில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இப்படம் தற்போது, கொரியன் மொழியில் ரீ-மேக்காக இருக்கிறது.
இதுகுறித்து இயக்குநர் சுஜாய் கோஷ் தன் டுவிட்டரில் உறுதிப்படுத்தியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது... ‛‛கஹானி படம் கொரியன் மொழியில் ரீ-மேக்காக உள்ளது, வாழ்த்துகள் பேகம் ஜான்(வித்யாபாலன்) என்று கூறியுள்ளார். இதன்மூலம் கொரியன் மொழியில் ரீ-மேக்காகும் முதல் ஹிந்திப்படம் கஹானி என்ற பெருமையை பெற்றுள்ளது.
தற்போது, வித்யாபாலன் ‛பேகம் ஜான்' என்ற படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வருகிற ஏப்., 14-ம் தேதி படம் ரிலீஸாக உள்ளது.