Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கவர்ச்சி நடனம் ஆன கேத்ரினாவுக்கு 65 லட்சம் சம்பளம்

23 மார், 2017 - 15:55 IST
எழுத்தின் அளவு:
catherine-tresa-got-Rs.65-lakhs-for-a-song

தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் நடித்து வந்த கேத்ரின் தெரசா மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு கணிதன், கதகளி படங்களில் நடித்தார். தற்போது ஆர்யாவுடன் கடம்பன், கதாநாயகன் படங்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்த கேத்ரின் தெரசா அதன் பிறகு தெலுங்கு படங்களில் கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார். ஆர்யாவுடன் நடிக்கும் கடம்பன் படத்தில் மலைவாழ் பெண்ணாக நடித்து வருகிறார்.


முதன் முறையாக கேத்ரின் ஒரு பாட்டுக்கு ஆட இருக்கிறார். தெலுங்கில் பெல்லம் கொண்டா சாய் சீனிவாஸ், ரகுல் பிரீத்தி சிங் நடிக்கும் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட ஒப்புக் கொண்டிருக்கிறார் கேத்ரின் தெரசா. தெலுங்கு படத்தில் நடிக்க 80 லட்சமும், தமிழ் படத்தில் நடிக்க 60 லட்சமும் கன்னடம் மற்றும் மலையாளப் படங்களுக்கு 40 லட்சமும் சம்பளம் வாங்குகிறாராம் கேத்ரின். இந்தப் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட 40 லட்சம் சம்பளம் கேட்டுள்ளார் கேத்ரின். அதன் பிறகு பாடலுக்கான ஒத்திகை நடந்தபோது படு கவர்ச்சியாக ஆட வேண்டியதை உணர்ந்தார் கேத்ரின். அதனால் கவர்ச்சியாக நடனம் ஆட வேண்டும் என்றால் கூடுதலாக 25 லட்சம் சம்பளம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதற்கு தயாரிப்பு தரப்பும் ஒப்புக் கொண்டிருக்கிறதாம். விரைவில் இதன் படப்பிடிப்புகள் நடக்க இருக்கிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in