சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றவர் நடிகை லாரா தத்தா. பாலிவுட்டில் ஏகப்பட்ட படங்களில் நடித்திருப்பவர், தமிழில் அர்ஜூன் உடன் ‛அரசாட்சி' என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் தயாரிக்கும் ஒரு படத்தில் வித்தியாசமான வேடம் ஏற்க இருக்கிறார் லாரா தத்தா.
தேசிய விருது பெற்ற இயக்குநர் சுஷில் ராஜ்பால் ஒரு படத்தை இயக்க உள்ளார். இதில் லாரா தத்தா, வெளிநாட்டு தாயாக நடிக்கிறார். அதுவும் வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்து திருமணம் செய்யாமல் டெஸ்ட்-டியூப் மூலம் குழந்தை கொள்ளும் தாய் வேடத்தில் நடிக்க உள்ளார். லாரா தத்தாவுடன் வினய் பதக்கும் முக்கியமான ரோலில் நடிக்கிறார். ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.