தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் ஸ்பை திரில்லர் படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையிலும் இப்பட தலைப்பு இதுவரை அறிவிக்கப்படவில்லை. இது ஒருபுறம் இருக்க தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் முதல் டீசரை ஏப்ரல் 14 தமிழ்புத்தாண்டு அன்று தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும் மே 28ல் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை ஐதராபாத்தில் நடத்தவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றதாம்.
மகேஷ் பாபு உளவுதுறை அதிகாரியாக நடிக்கிறார், நாயகியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்தி சிங் டாக்டர் வேடத்தில் நடிக்கின்றார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார். வில்லனாக பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கின்றார். தாகூர் மது மற்றும் என்.வி.பிரசாத்தின் இணை தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை ஜூன் 23ல் தமிழ் மற்றும் தெலுங்கில் திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.